கனடா: பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்.
டோராண்டோ: பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதிக்க முயன்ற இளம் பெண் ணால் பெரும் பீதி ஏற்பட்டது. கனடாவின் கல்கேரி விமான நிலையத்திலிருந்து வெஸ்ட் ஜெட் நிறுவன விமானம் இன்று காலை ஹலிபேக்ஸ் விமான நிலையத்துக்கு 131 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவசரகால கதவை திறந்து கொண்டு ஒரு பெண் கீழே குதிக்க முயன்றார். அவரை விமானப் பணிப் பெண்களும், பிற பயணிகளும் சேர்ந்து அமுக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் வின்னிபெக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் எதற்காக கீழே குதிக்க முயன்றார் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு கனடாவில் 20 வயது வாலிபர் ஒருவர் 7,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்தார். அவரது உடல் கடைசிவரை கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment