Friday, July 30, 2010

தமிழ் இளைஞனின் சிறு நீரகங்கள் இரு சிங்கள இளைஞர்களுக்கு மாற்றப்பட்டன.

உயிர் பிரியும் தருணத்திலும் உடற் பாகங்களை தானம் செய்து இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்ற தமிழ் இளைஞன் ஒருவன் முன்வந்துள்ளான். கண்டியில் மூளை உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் சிறுநீரகங்கள், இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

விபத்து ஒன்றினால் பாதிக்கப்பட்ட குறித்த தமிழ் இளைஞரின் உயிர் பிரிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், சிறுநீரகங்களை தானமாக அளித்துள்ளார். குறித்த தமிழ் இளைஞரின் தாயார் இந்த ஈகைக்கு இணங்கியுள்ளார்.

தனது மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாது என அறிந்து கொண்ட குறித்த தாய், தனது மகனின் உடற் பாகங்களைப் பயன்படுத்தி இரண்டு உயிர்களை காப்பாற்ற பங்களிப்பு வழங்கியுள்ளார்.

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டியைச் சேர்ந்த எம். யோகேந்திரன் என்ற தமிழ் இளைஞரின் சிறுநீரகங்களே இவ்வாறு, வேறு நபர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

யோகேந்திரனின் தாயாரின் நடவடிக்கை சமூகத்தில் ஏனையோருக்கு சிறந்த படிப்பினைகளை புகட்டும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக சத்திர சிகிச்சையை மேற்கொண்ட டொக்டர் ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

1 comments :

Pon Sivaji ,  July 31, 2010 at 2:57 PM  

Hats off to the mom of the young man who lost his life tragically at the same time my deepest sympathies to the family of this young man.Whether it is Sinhallese, Tamil or Muslim life is precious.The kidney does not know the differences of race caste or creed. This mom and her family have demonstrated their courage and compassion even at this tragic circumstances in their life. May the soul of this young man rest in bliss and peace and our prayers are with this family

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com