பம்பலப்பிட்டி கடலில் குதித்து தற்கொலை.
கொழும்பில் பம்பலப்பிட்டி கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 28 வயது இளம் யுவதி ஒருவரை அப்பகுதியில் கடமையில் நின்ற இராணுவ சிப்பாய் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இன்று மாலை காப்பாற்றி இருக்கின்றனர்.
தற்கொலைக்கு முயற்சித்தவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகின்றது. கடலோரத்தில் அமைந்திருந்த சோதனைச் சாவடி ஒன்றில் கடமையில் இருந்த இருவரும் தற்கொலை முயற்சியை நேரில் கண்டு சமயோசிதமாகச் செயற்பட்டு யுவதியைக் காப்பாற்றினர்.
0 comments :
Post a Comment