வீரமக்கள் தினம்!
இன்றையதினம் வீரமக்கள் தினத்தின் இறுதி நாளாகும். தமிழீழ விடுதலை புலிகளால் கொழும்பு நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட த.வி.கூ. யின் செயலர் அமரர் அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட யூலை-13ம் திகதியில் இருந்து புளொட் செயலர் அமரர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட யூலை 16ம் திகதி வரையிலான பகுதியை வீரமக்கள் தினமாக பிரகடனப்படுத்தி வீரமக்கள் தினம் கடந்த 20 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.
கடந்த 13ம் திகதி மலரஞ்சலியுடன் ஆரம்பமாகிய வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்றையதினம் வவுனியா கோயில் குளம் உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள அவரது சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் இடம்பெறும் என்று புளொட் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட அவ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சக விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரணித்த
போராளிகள், பொதுமக்கள், தலைவர்கள், கல்விமான்களுக்கு தமது அஞ்சலியை தெரிவிப்பர் என்று புளொட் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment