எமது கல்வி பிரச்சனைகளை தீர்த்து தாருங்கள் அ.இ.மு கல்வி மாநாட்டு அமைப்பு
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் பிரதி சுற்றாடல் வளத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சந்தித்து முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவற்றுக்கு கல்வியமைச்சர் ஊடாக விரைவில் தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது. இந்த சந்திப்பு சுற்றாடல் வளத்துறை அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது
மேலும், இலங்கை முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளை உடனடியாக அமுல்படுத்த கல்வியமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியமைக்கு இது தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு பெற்று தருவதாகவும், இது தொடர்பில் முஸ்லிம் கல்வி மாநாடு அமைப்பின் உறுப்பினர்கள் கல்வியமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment