ஜ.நாவின் முன் சாதாரண நிலைபாட்டை ஏற்படுத்துக.
கடந்த சில நாட்களாய் இலங்கை ஜ.நா செயலகத்தின் முன்பு நடைபெறும் கோபத்துடன் கூடிய ஊர்வரத்தினை சாதாரணமான நிலைமைக்கு கொண்டு வருமாறு இலங்கை அரசை பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படு்ம் மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு எனவும் , இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைக்கு அன்றி எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை அரசு தான் கூறியதை கருத்திற்கொண்டு செயற்படும் என தான் நம்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் போர் முடிவுற்றதும் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் போது , அவரும் ஜனாதிபதியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆலோசனை குழு குறித்து இருவரும் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டமையை இலங்கை அரசிற்கு நினைவுபடுத்தியும் உள்ளார்.
0 comments :
Post a Comment