மன்னார் பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
மன்னார் மாவட்டத்தின் கீரி பகுதியில் மக்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக நீர்விநியோகம் முறையாக இடம்பெறாததை தொடர்ந்து மக்கள் பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை உணர்ந்த பிரதேச செயலர் உடனடியாக நீர் விநியோகத்திற்கான கொந்தராத்துக்காரர்களை அழைத்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேசினார்.
நீர்விநியோகம் இனிவரும் காலங்களில் தடைப்படாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
0 comments :
Post a Comment