கொழும்பில் பாதாள உலக கோஷ்டி உறுப்பினர் மூவர் பொலிஸாரால் கைது
கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொலன்னாவை பிரதேசங்களில் நேற்றிரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் 02, 9 மில்லி மீற்றர் ரக ரவைகள் 07, 38 மில்லி மீற்றர் ரக ரவைகள் 17 போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமையவே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment