குற்றவாளிகளைப் பிடிக்க உதவுக: உலகப் போலிஸ்
உலகில் கொலை, கற்பழிப்பு, சிறார் பாலியல் கொடுமைகள், இதர கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டுவரும் நூற்றுக் கணக்கான பேர்வழிகளைப் பிடிக்க உதவும்படி கணினி இணையம் புழங்குவோருக்கு உலகப் போலிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் மொத்தம் 450 பேரைத் தேடிப் பிடிக்கும் நோக்கத் துடன் மே மாதம் 3ம் தேதி வேட்டை தொடங்கியது. தேடப்படும் அந்தப் பேர்வழிகள், குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட்ட வர்கள். அல்லது சந்தேகப் பேர்வழிகள். அவர்கள் 29 நாடுகளில் தேடப்படு கிறார்கள். அல்லது அந்த நாடுகளில் அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
நூறு பேருக்கும் அதிக குற்றவாளிகள் ஏற்கனவே கைதாகி இருக்கிறார்கள் அல்லது அவர்கள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரான்சில் லையோன் என்ற நகரில் தளம் கொண்டு இருக்கும் உலகப் போலிஸ் தெரிவித்துள்ளது.
இத்தகைய பேர்வழிகள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் fugitive@interpol.int, என்ற முகவரிக்கு அவற்றை அனுப்பலாம் என்று அந்த அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கைதானவர்களில் கொலம்பியாவின் முன்னாள் விளம்பர அழகி அங்கி வேலன்சிவயா ஒருவர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டுவந்த இவர் கடந்த மே மதம் அர்ஜெண்டினாவில் பிடிபட்டார்.
கள்ளப்பணம் தொடர்பில் பிரான்ஸ், பஹ்ரைன் நாடுகளில் தேடப்பட்டுவந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த முனாங்கா ஜூன் 16ம்தேதி தென்னாப்ரிக்காவில் கைதானார்.
0 comments :
Post a Comment