வீரவன்ச உண்ணாவிரதம் . ஐ.நா அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவில் பேச்சு.
இலங்கையின் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா.செயலாளர் பான் கீ மூன அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பேளத்த பிக்குளின் ஆசீர்வாதத்தை பெற்று உண்ணாவிர மேடையில் அமர்வதற்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ஸ, தாம் இந்தப் போராட்டத்தின் போது உயிரிழந்தாலும், இந்நாட்டையும் , பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டுத்தந்த படையினரையும் நேசிக்கும் மக்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உயர்மட்டச் சந்திப்பொன்றினை, நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா.வின் இணைப்பேச்சாளர் சோய் சோங்ஆ இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி டாக்டர் பாலித கோஹண ஆகியோர் கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து புதிய உத்தரவாதமளித்துள்ளதாகவும் சோய் சோங்ஆ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தொடர்ந்து கவனமெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து நிலைமைகள் சீராகும் பட்சத்தில் அதிகாரிகள் வெகுவிரைவில் கடமைக்குத் திரும்புவர் எனவும் சோங்ஆ கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment