தமிழ் அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப் போவது இல்லை: இலங்கை அறிவிப்பு
பிரிட்டனில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள எவருக்கும் தாம் இனி பாஸ்போட்டை வழங்கப்போவது இல்லை என இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள இலங்கை அகதிகள் தமது அகதி விண்ணப்பத்தை முதலில் ரத்துச்செய்த பின்னரே இலங்கை பாஸ்போர்ட்டைப் பெறமுடியும் அல்லது தற்காலிக பிரயாண பாஸ்போர்ட்டைப் பெறமுடியும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அப்படியாயின் பிரிட்டனில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கு அரசு விசாவை வழங்கும்போது, இலங்கை அரசு பாஸ்போட் வழங்க மறுக்கும் நிலையில், அவர்கள் எவ்வாறு பயணிப்பது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
பாஸ்போர்ட் வேண்டும் என்றால் அகதி விண்ணப்பத்தை ரத்துச் செய்துவிட்டு இலங்கை செல்லலாம் என இலங்கை தூதரக அதிகாரிகள் பதிலளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 comments :
Post a Comment