மிலிந்தவை பாராளுமன்றுக்கு கொண்டுவர ஜனாதிபதி திட்டம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மிலிந்த மொறக்கொடவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு கொண்டுவர ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
மிலிந்த மொறக்கொடவை விருப்பு வாக்குகளால் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி திரைமறைவில் செயற்பட்டார் என்ற செய்திகள் தேர்தல் காலங்களில் நிலவியிருந்த நிலையில் இம்முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அரச திணைக்களங்களில் ஆலோசகர்களாகவும் , இயக்குநர்களாகவும் பதவிகள் வழங்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாக மற்றம் நந்னண குணத்திலக ஆகியோரே மேற்படி வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
...............................
0 comments :
Post a Comment