இலங்கையில் ஊடக அதிகார சபை என்ற சபையொன்று அமைக்கப்படுமாம்.
ஊடகங்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல கண்டியில் தெரிவித்தார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப்பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச கொள்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கருத்தரங்குத் தொடரின் முதலாவது கருத்தரங்கு இன்று கண்டியில் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் பீ.பி.கனேகல மற்றும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச சவால்கள் மற்றும் மக்கள் சபை கருத்திட்டத்தின் ஊடாக மக்களை வலுப்பெறச் செய்தல் ஆகிய தொனிப் பொருட்களில் கருத்தரங்கில் விரிவுரைகள் நடைபெறவுள்ளன.
0 comments :
Post a Comment