ஊடக அபிவிருத்தி அதிகார சபை : ஊடக சுதந்திரத்தினை கட்டுப்படுத்தும் நோக்கமற்றதாம்.
இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஊடக அபிவிருத்தி அதிகார சபை ஊடக சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் , குற்றச்சாட்டுக்களை முற்றாக அரசாங்கம் நிராகரிக்கின்றது.
ஊடக அபிவிருத்தி அதிகாரசபை கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என அறிவித்துள்ள அரசாங்கம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துவதே அதன் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கின்றது.
ஊடக அபிவிருத்தி அதிகாரசபையை உருவாக்குதல் தொடர்பான யோசனைத் திட்டங்களை ஆர்வமானவர்கள் முன்வைக்க முடியும் என அரசாங்கம் என அறிவித்துள்ள அரசாங்கம் அடுத்த தலைமுறைக்கான தொழில்சார் தன்மையுடைய ஓர் துறையாக ஊடகத்துறையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டுக்கு யோசனைத் திட்டங்களை முன்வைக்க விரும்புவோர் அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment