வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் அரசாங்கம் நெற்செய்கை.
வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீட்டமிட்டுள்ளது. இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலங்களில் மீண்டும் நெல் விளைச்சலை ஆரம்பிக்க வேண்டுமென அரசாங்கம் இத்திட்டத்தினை முன்னெடுக்கின்றது. இவற்றில் பெரும்பாலானவை அரச தற்காலிக அனுமதி பெற்ற பெரும்போக காணிகளாகும். குறிப்பாக அக்காணிகளில் பெரும்போகம் செய்வதற்கு அனமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தவர்கள் அவற்றை தொடர்ந்தும் பயன்படுத்தாவிடத்து குறிப்பிட்டு அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும் என்பது யாவரும் அறிந்ததே.
0 comments :
Post a Comment