த.தே. கூ ன் வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை பனையில் இருந்துதான் தேங்காய் பறிப்போம் என்ற வறட்டு கௌரவம் .
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகான சபை நீதிமண்றத்தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டு தற்போது கிழக்கு மாகாணத்திற்கு நடைமுறை மாகான அரசு மிகவும் முன்மாதிரியாக செயற்பட்டுக்கொண்டிருப்பதும் வட மாகாண சபைக்கான தேர்தல் மிக விரைவில் நடைபெற இருப்பதும் அப்படி நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்த விடயங்களே.
கொள்கை தெளிவற்ற நிலையிலும் தலைமை பலமற்ற வகையிலும் அரசியல் அரங்கில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைபினர் அண்மையில் இந்தியா செண்று பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கிடம் மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது கிழக்கில் உள் ள மக்களிடத்திலோ அல்லது வடக்கில் உள்ள மக்களிடத்திலோ எந்தவித அபிப்பிராயங்களும் ஆராயப்படாமலே வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டது.
அதனை மீண்டும் இணைக்கக் கோருவதும் அல்லது பிரிந்தே இருக்க வேண்டும் எனக் கோருவதற்கும் ஒவ்வருவருக்கும் ஜனநாயக சுதந்திரம் இருப்பது உண்மையே என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் எதை வேண்டுமானாலும் கோரலாம் ஆனால் அவர்களின் கோரிக்கைகள் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மாகாண மக்களின் குரலாக ஒருபோதும் கருத்தப்பட முடியாதது.
புலிகள் இல்லாத நிலையில் நடாத்தப்பஙட்ட தேர்தலில் கிழக்கில் 126398 வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்ற அதேவேளை மாற்றுக் கட்சிகள் 450728 வாக்குகளையும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 106792 வாக்குகளும் ஏனைய கட்சிகள் 147439 வாக்குகளையும் பெற்றனர்.
எனவே வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை விட அவர்களுக்கும் அவர்களது தெளிவற்ற கொள்கைக்கும் எதிராகவே அதிகப்படியான மக்கள் உள்ளனர் என்பது மிகத் தெளிவாகக் காட்டுகிண்றது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு கோரிக்கையை இலங்கை அரசாக இருந்தலும் சரி இந்திய அரசாக இருந்தாலும் சரி மாற்றுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு கிழக்கு மக்களின் விருப்பு அறிய கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டே கிழக்கு மக்களின் விருப்பிற்கேற்பவே இவ்விடயம் கையாளப்பட வேண்டும்.
இதுபோண்றே சில காலமாக இனப்பிரச்சை தீர்வு விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்கள் சார்பாக தங்களுடனே பேசவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழக்கமிடத் தொடங்கியிருக்கிண்றார்கள். இது புலிகளின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கை பின்பற்றலாகக் கருதினாலும் வடக்கு கிழக்கில் 233190 வாக்குகளை மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற 5998167 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வாக்களிக்கப்பட்டிருக்கிண்றது.
எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களாக இலங்கை அரசோ இல்லை இந்திய அரசோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவோ அல்லது வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாகவோ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை கொடுத்து ஒருமித்த வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது இண்றைய காலத்தின் கட்டாய தேவை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எஸ்.எஸ். கணேந்திரன்.
1 comments :
மூதேவிகளின் வறட்டு வெளரவம், அளவுக்கு மீறிய தலைக்கனம், குறுகிய சிந்தனை, சுயநலம், மந்த புத்தி என்பவற்றால் தான் தமிழினம் இருந்ததையும் இழந்து கோவணத்துடன் நிக்கிறது.
இனியும் திருந்துங்களா அந்தப் பரதேசிகள்?
Post a Comment