புலிகளின் சர்வதேச வலையமைப்பயை இயக்கும் பலருக்கு சர்வதேச மட்டத்தில் வலைவிரிப்பு.
ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளைத் தளமாக கொன்டு எஞ்சியிருக்கும் எல்ரிரிஈயினர் மேற்கொன்டுவரும் ஆட்கடத்தல், ஆயுதக்கடத்தல், பணமோசடிகளில் ஈடுபட்டுவருவதற்கான முக்கிய ஆவனங்களை இராணுவப் புலனாய்வு துறையினர் விஸ்வமடுப் பகுதியில் இருந்து கன்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இயங்கிவரும் எல்ரிரிஈ வலையமைப்பு உடைக்கப்படாவிட்டால் இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் அவர்களின் செயற்பாட்டைக் கட்டுபடுத்தமுடியாது என்பதை இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இயங்கிவரும் எல்ரிரிஈ வலையமைப்பை உடைக்க இலங்கைப் புலனாய்வுத்துறையினர் சர்வதேச பொலிசாருடன் இனைந்து பல நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது.
அச்சுதன் ,சுரேஸ் என அழைக்கப்ட்ட சிவராசா பிரூதரன், பவி எனஅழைக்கப்ட்ட பஹிரதன், நரேன் என அழைக்கப்படும் ரத்னசபாபதி, ரூபன் அன அழைக்கப்ட்ட கனேஸ்ரூபன், ராஜா, அய்யா என அழைக்கப்ட்ட ஆனந்தராஜா மற்றும் பல எல்ரிரிஈ உறுப்பினர்கள் வியாபாரிகள் போல் நடமாடி ஆயுதக் கடத்தல்களில் இடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் மீது பாதுகாப்பு படையினரின் கவனம் திரும்பியுள்ளதாக அறிக்ககைள் தெரிவிக்கின்றன.
எல்ரிரிஈ இயக்கத்தின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட கெஸ்ரோவின் மறைவிடத்திலிருந்து கன்டுபிடிக்கப்பட்ட ஆவனங்களில் மற்றும் நாளேடுகளிலிருந்து எல்ரிரிஈயினர் வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளும் செயற்படுகள் மற்றும் இயக்கத்துக்கு நிதிதிரட்டிய முகவர்கள் சம்பந்தமான விடயங்களும் கிடைத்துள்ளன. மேலும் எல்ரிரிஈயினரின் சில முதலீடுகள் மற்றும் கப்பல்கள் தொடர்பாக பண செலுத்திய ஆவனங்களும் கன்டெடுக்கப்பட்டுள்ளன.
புலனாய்வுத் தகவல்களின்படி ராஜா மற்றும் அய்யா என அழைக்கப்பட பொன்னய்யா ஆனந்தராஜா எல்ரிரிஈ இயக்கத்தின் சர்வதேச நடவடிக்ககைகளை இயங்கி வந்தவர். இவர் எல்ரிரிஈ நிதி மற்றும் கப்பல்கள் தொடர்பான விடங்களுக்கு தலைவராக 2002 - 03 இலிருந்து செயற்பட்டுவருகின்றார். இவர் கிழக்கு நாடுகளிலுள்ள பயங்கரவாதிகள் மற்றும் மாபியாக்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்துவது இவரது கடமையாகவும் வழங்கப்பட்டிருந்தது. பிரதானமாக ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் வழங்குனராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
1949 ஆண்டு ஒக்டோமபர் 13ஆம் திகதி சங்கானையில் பிறந்த ஆனந்தராஜா அமரிக்க கடவுச்சீட்டுடயவர். பல நாடுகளிலிருந்தும் செயற்பட்டுள்ளார். 2010 இலிருந்து கனடாவில் வசித்துவருகின்றார். தற்போது கிடைக்கும் தகவல்களின் படி சலர்வதேச பொலிசாரால் பிடிவிராந்து பிறப்பிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சுனன் என அழைக்கப்படும் சிவராசா பிருந்தன் 1972 ஆம் ஆண்டு யாழ்பானத்தில் பிறந்தவர். பிரான்ஸ் நாட்டு கடவுச் சீட்டுடையவர். தற்போது கீழ்மட்ட வாழ்கையை நடத்திவருகின்றார். இவர் எல்ரிரிஈ சர்வதேச வலையமைப்பில் தொடர்புகளை நடத்திவந்தவர். தற்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் தனது இரு குழந்தைகளுடன் வசித்துவருகின்றார். இவர் விமான ஓட்டுனர் பயிற்ச்சியை பிரான்சில் பெற்றுள்ளதுடன் அடிக்கடி ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு நாடுகளுக்கும் பயனித்து வந்தவர்.
கிழக்கு நாடு ஒன்றில் இவர் சந்தேகத்கிடமாக ஒருமுறை பெருந் தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டார் ஆனால் வியாபார நடவடிக்கைகளைக் கான்பித்து சாதூரியமாக தப்பிக்கொன்டார்.
கிடைக்கப்பெற்றிருக்கும் இவரது ஆவனங்களின்படி இவர் எல்ரிரிஈயினரின் ஆகாயப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர் விமான ஓட்டுதல் பயிற்ச்சியைப் பெற்றுள்ளதுடன் தற்கொலைப்படை போராளியாகவும் பயிற்ச்சி பெற்றுள்ளார். இவரது சகேதரர்கள் கிழக்கு மற்றும் கனடாவிலும் வசித்துவருகின்றனர் இர்களுக்கும் எல்ரிரிஈயினருடன் தொடர்பு இருக்கின்றதா எனட்பதை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, நடராஜன் ஐரோப்பாவில் செயற்பட்டுவருகின்றார். இவர் ரஸ்சிய பெண்ணைத் திருமனம் செய்துள்ளார். பஹிரதன் மற்றும் ரூபன் இருவரும் எல்ரிரிஈயின் முக்கிய தலைவர்கள் இவர்கள் இந்தனோசியாவில் செயற்பட்டு வருகின்றனர்.
கெஸ்ரொவின் மறைடத்திலிருந்து கன்டுபிடிக்கப்ட்ட ஆவனங்களில் எல்ரிரிஈயினர் பல மில்லியன் ரூபாக்களை நீதியாகவும் மற்றும் நீதிக்குப்புறம்மபான முறைகளில் முதலீடு செய்துள்ளதற்கான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன இவற்றுக்கான விசாரனைகளை அதிகாரிகள் மேற்கொன்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment