Friday, July 9, 2010

பெனாசிர் கொலை: பாக்.கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. ஐ.நா.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் நிராகரித்துவிட்டார். பெனாசிர் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா. விசாரணைக் குழு ஏற்கனவே தனது விசாரணையை முடித்து, அறிக்கையை அளித்துவிட்டது.

அதில் பெனாசிர் படுகொலை செய்யப்பட இருப்பது குறித்து அப்போதைய அதிபர் பர்வேஸ்முஷாரப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும், உரிய பாதுகாப்பு அளிக்க தவறியதே அவர் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நா. குழு விசாரணை அறிக்கையில் இடம்பெற்ற சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தும், பெனாசிர் படுகொலை குறித்து மீண்டும் ஐ.நா. குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் அவ்வாறு விசாரணை ஏதும் நடத்த முடியாது என்றும், விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் ஐ.நா. செயலர் பான் கி மூனின் உதவி பேச்சாளர் ஃபரன் ஹக், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment