மக்கள் முன் அரசாங்கம் முளங்காலிடும் நாள் தொலைவிலில்லை. அனோமா பொன்சேகா.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னனாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான ஜெனரல் பொன்சேகவை விடுதலை செய் , நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டு என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கொழும்பு நகரில் ஜனநாயக மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசிய திருமதி அனோமா பொன்சேகா, நாட்டு மக்களின் பலதின் முன்னால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் முளங்காலிடுவதற்கான நாள் தொலைவிலில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தமது போராட்டங்களினால் தாம் எதிர்கொள்ளும் எந்த சவால்களுக்கும் முகம் கொடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் சிலர் தாம் பலவீனமடைந்துள்ளதாக கருதுவதாகவும் அவர்களுக்கு இங்கு திரண்டுள்ள ஜனத்திரள் பதில் சொல்லும் எனவும் இன்றைய ஆட்சியின் முன்னால் தான் இவ்வாறானதொரு ஜன வெள்ளத்தை எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் சுதந்திரமானதும் நீதியானதுமான முடிவுகளை எடுப்பதற்கு இன்று நீதித்துறைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதனை சொல்லி தெரிந்துகொள்ளத் தேவையில்லை என கூறிய அவர் அரச அதிகாரம் இன்று நீதித்துறையில் தலையீடுகளை செய்கின்றது எனவும் கூறினார்.
அதே கூட்டத்தில் பேசிய ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வ ழங்கப்படாவிட்டால் அரசாங்கம் மக்களின் எதிர்ப்புக்கு முகம்கொடுக்க தாயாராகவேண்டும் என எச்சரித்ததுடன் இவ்வரசாங்கம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை நாட்டின் ஜனநாயகத்தை ஒழிப்பதற்கு பயன்படுத்துகின்றது எனவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஒருவர் இருமுறைகளே இருக்க முடியும் என்ற நியதியை மாற்றியமைக்க முனைந்த ஜனாதிபதி அதற்கு மக்களிடமுள்ள எதிர்பை உணர்ந்துள்ளதாலேயே அவ்வெண்ணத்தை கைவிட்டு தனக்கு தேவையானவாறு அரசியல் யாப்பினை மாற்றியமைக்க முனைந்து வருகின்றார் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment