இலங்கையில் எதுவும் திருப்திகரமாக இடம்பெறவில்லை -ரணில் விக்கிரமசிங்க
இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பவை எதுவமே திருப்தியாக இல்லை என சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தெரிவிக்கையில் , தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் நடப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் எதுவும் திருப்திகரமாக இல்லை. இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் மற்றும் இருநாட்டின் மீனவர் சங்க பிரதிநிதிகளும் சேர்ந்து பேச்சு நடத்தவேண்டும். இந்தப் பேச்சு மனம் விட்டு, சுதந்திரமான வகையில் நடந்தால்தான் சுமூகத் தீர்வு காண முடியும்.
இலங்கை அரசு தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறபோதும், அங்கு நாம் அவ்வாறான பணிகள் எதனையும் காணவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரச்னையை எழுப்ப இருக்கிறோம்.
மேலும், ஐ.நா. குழு இலங்கை வந்தது சரியா என தெரியவில்லை. அதே நேரத்தில் அந்தக் குழுவை திருப்பி அனுப்பியது சரியல்ல.
மொத்தத்தில் இலங்கையில் இன்று உள்ள நிலவரம் எதுவுமே திருப்திகரமாக இல்லை என்றுதான் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஒருவாரம் இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள ரணில் வி;பார். விக்ரமசிங்க, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய ஆட்சியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ரணில் இந்திய ஆட்சியாளர்களுக்கு தெளிவுப்படுத்துவார் என கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment