Saturday, July 10, 2010

விமலுக்கு ஜனாதிபதி பால்பருக்கினார். உண்ணா நோன்பு முடிவு.

ஐ.நா வின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கான ஆலோசனை குழுவை கலைக்வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரத்தை ஆரம்பித்திருந்த அமைச்சர் விமல்வீரவன்சவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது. ஸ்தலத்திற்கு விரைந்த ஜனாதிபதி அவருக்கு பால்பருக்கி உண்ணாவிரத்ததை முடித்து வைத்துள்ளார். அவ்விடத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலரும் சென்றிருந்தார்.

ஊடகவியலாளர்களுடன் நேற்று பேசிய விமல் வீரவன்ச, தான் ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரம் வெற்றியில் முடியும் அல்லது மரணத்தில் முடியும் என தெரிவித்திருந்தார்.

இதுவரை வீரவன்சவின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக தன்னும் ஐ.நா வினால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக ஐ.நா ஊழியர்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு அரசாங்கம் நடந்து கொள்ளவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

1 comment:

  1. அசல், மூன்றாம் உலக நாட்டு கோமாளி கூத்து.

    இப்படி எத்தனை, எத்தனையோ கூத்துக்கள் ஆடி முடிந்து, எவரும் செத்ததும் இல்லை, எதுவும் உருப்படியாக நடந்ததும் இல்லை.

    அத்துடன் எவரும் கணக்கில் எடுத்ததும் சரித்திரத்தில் இல்லை.

    உலக மக்கள் முட்டாள்கள் இல்லை.

    விமல் சூரவன்ச

    ReplyDelete