Thursday, July 15, 2010

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆழ ஊடுருவும் அணியினர் யாழ்பாணத்தில்.

அமைச்சர் பி தயாரட்ண தலைமையிலான ஆழும் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று நேற்று யாழ் விஜயம் செய்துள்ளது. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா வீட்டிற்கு சென்று பேசியுள்ளதுடன் அவரது வீட்டில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நாடத்தியுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் ஆழ ஊடுருவும் படையணிகள் பாரிய பங்களிப்புக்களை செய்திருக்கின்றது. அது யுத்தத்தில் மட்டுமல்ல அரசியலிலும் கூட. அந்தவகையில் நேற்று யாழ் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் ஆழ ஊடுருவும் படையணியினர் எதிரிவீட்டில் ஊடகவியலாளர் மாநாட்டை நாடாத்தி தாக்குதலில் வெறியடைந்துள்ளனர் என அரசியல் நோக்குனர்கள் தெரிவிக்கின்றனர். இந்நடவடிக்கையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கட்கு விஜயகலா மீது சந்தேகத்தை தோற்றுவிக்க முடிந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆழ ஊடுருவும் அரசியல் படையணியினரின் நடவடிக்கைகள் எதிர்கட்சியை மேலும் பலவீனப்படுத்தி வருகின்றது. எதிர் கட்சியினுள் இருந்து கொண்டே ஆழும் கட்சிக்கு ஒத்தாசை வழங்கும் படலம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இவ்வாறு செயற்படுபவர்கள் பலர் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் , நுவரேலிய மாவட்ட பா.உ சிறி றந்கா, அம்பாந்தோட்டை பா.உ சஜித் பிறேமதாஸ என பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.

இலங்கையில் புலிப்பயங்ரவாதத்தை வழர்ப்பதற்கு கூப்பாடு போட்டவர்களில் சிறி றந்கா ஆற்றிய பணி அளப்பரியது. சக்தியின் மின்னல் நிகழ்ச்சி ஊடாக தன்னை புலிப் பக்தன் என காட்டிக்கொண்டு புலிகளியத்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்றபோது புலிகள் அப்பிழவிற்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்களை முன்னின்று நாடாத்தி தமிழ் செல்வனின் விசேட பாராட்டுதலுக்கு ஆளானவர் சிறிறங்கா.

இவர் தற்போது ஆழும்கட்சிக்கு மிக விசுவாசமான எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் முன்னணியில் உள்ளார். சிறிறங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டிடியடுகின்றார் என்ற செய்தி வெளியானபோது புலம் பெயர் புலிகள், தமது பெயரால் பிரபல்யம் பெற்றுள்ள இவர் எவ்வாறு எமது உத்தரவில்லாமல் போட்டியிட முடியும் என்ற போர்வையில் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

உங்கள் தொடர்பாக விமர்சங்கள் எழுகின்றதே எவ்வாறு சமாளிக்கப்போகின்றீர்கள் என இவருடன் இணைந்து புலிகளுக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த ஒருவர் கேட்டபோது , "பொன்னாடைகளால் கூட ஒன்றும் பண்ண முடியாது போய்விட்டது , இந்த பன்னாடைகளால் என்ன செய்யய முடியும்" எனக் கேட்டாராம் சிறிறங்கா.

இதிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆழ ஊடுருவும் அரசியல் படையணி நெடுங்காலங்களாகவே சிறப்பாக செயற்பட்டு வந்திருக்கின்றது என்ற முடிவுக்கு வரமுடியும். அதாவது சிறிறங்கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆழ ஊடுருவும் அரசியல் படையணியைச் சேர்ந்தவர் என்பதை ஆயுத பலம்பொருந்தியிருந்த வன்செயல் புலிகள் அறிந்து கொண்டபோது செய்ய முடியாது போனதை புலம்பெயர் புண்ணாக்கு புலிகளால் செய்யமுடியுமா என்பதே அவரது பதில்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் ஆழ ஊடுருவும் படையணியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் ஊடுருவியுள்ளனர்.

No comments:

Post a Comment