இலங்கைக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்தார் பான் கீ மூன்
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் நிராகரித்துள்ளார். ஐ.நா.அமைதி காக்கும் படைப்பிரிவில் இலங்கைப் படையினருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாதென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை பான் கீ மூன் நிராகரித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகளுக்கும், ஐ.நா. ஊடகப் பேச்சாளர் மார்டீன் நெசர்கீக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
ஹெய்ட்டி, சாட் போன்ற நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை அமைதி காக்கும் படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதி காக்கும் படையின் பணிகளுக்கும், ஆலோசனைக் குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
0 comments :
Post a Comment