Tuesday, July 20, 2010

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் செம்மொழி விழா.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண தமிழ் செம்மொழி விழா நேற்றுமுன்தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு புதுவை பல்கலைக்கழக தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி, சிங்கப்பூர் முனைவர் எ.வெங்கடேசன், கனடா சுவாமி விபுலானந்த கலைச் சங்கத் தலைவர் அஜந்தா ஞானமுத்து ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி நிசாம் தலைமையில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயரீதியில் முதலிடம்பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஆனந்த ராஜாவிற்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனினால் பரிசு வழங்கப்பட்டது.

மாகாண தமிழ் தினப் போட்டிகளில் முதலிடம்பெற்ற கலை நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறின. பேராசிரியர்கள், உபவேந்தர்கள் பிரதம செயலாளர் , பிரதிகல்விச் செயலாளர் ஆகியோர் நிகழ்வில் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்













படம் : விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com