சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை நிலைமைகளை திருப்பவே. வைகோ
இலங்கை தமிழருக்கான மறுவாழ்வு பணிகள் குறித்த உண்மை நிலையை அறிய, இலங்கைக்கு இந்தியாவின் சிறப்பு தூதர் ஒருவரை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கடிதம் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
அதில்,' தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருகிறது. இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும்' என்று யோசனை தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள கோரிக்கை இலங்கைத் தமிழர் பிரச்சினையை மீண்டும் திசை திருப்பும் நோக்கிலேயே அமைந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நெல்லையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:
இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது. அந்தக் குழுவுக்கு இலங்கை பெரும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய பிரதிநிதிகளும் தமிழர்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் இலங்கைக்கு சிறப்பு தூதர் அனுப்ப வேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை பிரச்னையை திசை திருப்புவதே ஆகும் என்றார்.
0 comments :
Post a Comment