ஐ.தே. கட்சிக்குள் தனித் தமிழ் பிரிவு!
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனியான தமிழ் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் , முஸ்லிம் சிறுபான்மை மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்திருந்தனர். கட்சியின் பொருளாளர் எம். சுவாமிநாதன் எம்பி இந்தப் பிரிவின் தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கும் முனைப்புக்கள் வெற்றிகரமான நிலையில் உள்ளன என்று மேல் மாகாணசபையின் ஐ.தே.க உறுப்பினர் சீ.வை. ராம் தெரிவித்தார்.
சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அலகு உருவாக்கப்பட்டுள்ளது என்றும்அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment