நாடுகடந்த அரசை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி அரசியல் தீர்வே. ரணில்
நாடு கடந்த அரசை இல்லாதொழிப்பதற்கு அர சியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண் டும் என்றும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்ஹ பாராளுமன்றத்தில் கூறி யிருக்கின்றார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விசுவாசமான நோக்கத்துடன் அது பற்றிப் பேசும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சிறு பான்மையினரின் வாக்குகளுக்காக மாத்திரம் அது பற்றிப் பேசும் அரசியல்வாதிகளும் உள்ளனர். யார் எந்த நோக்கத்துடன் பேசுகின்றார்கள் என்பதை அறி வதொன்றும் சிரமமானதல்ல.
இனப் பிரச்சினை தாம தமின்றித் தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையா கவே கருதுபவர்கள் முன்வைக்கப்படும் தீர்வை நிரா கரிக்கமாட்டார்கள். அத்தீர்வை அடிப்படையாகக் கொண்டு முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள். அதேநேரம் இனப் பிரச்சினைக் கான தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டையும் கொண்டிருப்பார்கள்.
ரணில் விக்கிரமசிங்ஹ இலங்கையின் பழமைவாய்ந்த தேசியக் கட்சியொன்றின் தலைவர். நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி அது. மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கின்ற கட்சி. இக் கட்சியின் தலைவர் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் பேசுவது எழுந்தமானப் பேச்சாக இருக்கக் கூடாது.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்ஹவின் செயற் பாடுகள் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஆதரவான வையாக இருக்கவில்லை.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் தொடர்பாக இவரும் இவரது கட்சியும் நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானது. அத் தீர்வுத் திட்டத்தை ஆதரிப்பது போன்ற வெளித்தோ ற்றத்தைக் காட்டிய போதிலும் அதைத்தோற்கடிக்க வேண்டும் என்பதில் ரணில் தீவிரமாக இருந்தார்.
பின்னர் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில், பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததாக அவர் கூறியதிலிருந்து அவ ரது உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள லாம். இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம்.
இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கான ஆலோச னைகளைத் தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றவில்லை. நொண் டிக் காரணங்களைக் கூறி அக்குழுவைப் புறக்கணித் தது. இனப்பிரச்சினையின் தீர்வில் உண்மையான அக் கறை உண்டென்றால் அதற்கான கட்சியின் ஆலோ சனைகளைக் கூறி அக்குழுவின் கருத்துப் பரிமாற லில் பங்குபற்றியிருக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்ஹ பாராளுமன்றத்தில் இனப் பிரச் சினையின் தீர்வு பற்றிக் கூறியதை இந்தப் பின்ன ணியில் பார்க்கும்போது இனப்பிரச்சினையின் தீர் வில் அவர் உண்மையான அக்கறை கொண்டிருக்கி ன்றார் என்ற அபிப்பிராயம் தோன்றாது. இந்த அபி ப்பிராயம் தோன்றும் வகையில் செயற்படுவதிலேயே அவரதும் அவரது கட்சியினதும் நம்பகத்தன்மை தங் கியுள்ளது.
எத்தகைய தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி சிபார்சு செய்கின்றது என்பதை வெளிப்படுத்துவதும் தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளிலும் பங்குபற்றுவதும் நம்பகத்தன்மையைத் தோற்றுவிப்ப தில் முக்கியமானவை.
0 comments :
Post a Comment