ரொனால்டோவின் மாஜி காதலி கொலை -உடல் நாய்க்கு வீச்சு!!
பிரேசிலின் பிளமங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் புரூனோ தனது காதலி எலிசாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக்கி நாய்க்குப் போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து அணி பிளமங்கோ. இதன் கோல்கீப்பாராக இருப்பவர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசவுசா. இவரது முன்னாள் காதலி எலிசா சமுதியோ.
சில நாட்களுக்கு முன்பு எலிசா திடீரென காணாமல் போய் விட்டார். தொடர்ந்து புரூனோவையும் காணவில்லை. இந்த நிலையில்தான் எலிசா கொலை செய்யப்பட்தாக தகவல் வந்தது. இந்தக்கொலை செய்தவரே புரூனோதான் என்றும் தெரிய வந்தது.
இந்த நிலையில், புரூனோ தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். எலிசாவைக் கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அவற்றை நாய்க்குப் போட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
25 வயதாகும் புரூனோவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. மறைமுகமாக எலிசாவையும் காதலித்து வந்துள்ளார். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே, தனது நண்பர் லூயிஸ் ஹென்ரிக் பெரைரா ரோமா எனப்படும் மெக்காரோ என்பவர் மூலம் எலிசாவை கடத்திச் சென்றுள்ளார் புரூனோ. பின்னர் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை வெட்டி துண்டு துண்டாக்கி நாய்க்கு வீசியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட எலிசா ஒரு ஆபாசப் பட நடிகை ஆவார். முன்பு மாடலாக இருந்தவர். போர்ச்சுகல் அணியின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியும் ஆவார்.
எலிசாவுக்கு புரூனோ மூலம் ஒரு குழந்தை நான்கு மாதங்களே ஆகிறது. இந்தக் குழந்தை பிறந்த பிறகுதான் புரூனோவுக்கும், எலிசாவுக்கும் இடையே மோதல் மூண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment