குடும்பநல மாது மர்ம மரணம். வைத்தியர் கைது : ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
யாழ்ப்பாணம், வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த குடும்பநல பெண் உத்தியோகத்தர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் கொலை செய்யப்பட்டிருச்கலாம் என்ற வலுவான சந்தேகம் கிளம்பிள்ளதுடன் அதே வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுளார்.
கைது செய்யப்பட்ட பிரியந்த செனவிரட்ண எனும் வைத்தியர் மரணத்தினை தற்கொலையாக சித்தரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருதுடன் , தூக்கில் விடப்பட்டிருந்த சடலத்தினை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் சுயமாக தொங்கியதாக தென்படவில்லை எனவும் இறந்தபின்னரே தூக்கில் போடப்பட்டிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டியுள்ளார்.
0 comments :
Post a Comment