போர்க்குற்றம் இடம்பெற்றிருந்தால் எனது கைகளுக்கே முதல் விலங்கு. பொன்சேகா.
இலங்கையில் போர்குற்றம் ஒன்று இடம்பெற்றிருந்தால் எனது கைகளுக்கே முதலாவது விலங்கிடப்படும் எனும் நிலையில் நான் எவ்வாறு போர்குற்றம் தொடர்பாக பொய்சாட்சி சொல்ல முடியும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனரல் பொன்சேகா யுத்தக்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சி சொல்லவுள்ளார் என்ற விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு தொடர்பாக இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு பேசுகையில் , சில்லறைகள் போர்குற்றம் ஒன்று இடம்பெற்றதாக காட்ட முற்படுகின்றன. இங்கு எவ்வித போர்குற்றமும் இடம்பெறவில்லை என நான் தொடர்சியாக கூறிவந்திருக்கின்றேன். சில்லறைகள் ஏதோ தாங்கள் தான் யுத்தம் புரிந்தால்போலும் போர்குற்றம் இடபெற்றுள்ளதுபோலும் நாடகமாடுகின்றனர். போர் குற்றம் இடம்பெற்றிருந்தால் அதற்கு நானே பொறுப்பு. இவ்வாறான நிலையில் போர்குற்றம் இடம்பெற்றதாக பொய்சாட்சி சொல்லி எனது கையை விலங்கிடுமாறு நீட்டுவதா. நான் சாட்சி சொல்வதால் இந்த சில்லறைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சில்லறைகள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.
இங்கு எவ்வித போர்குற்றமும் இடம்பெறவில்லை அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதற்கு தான் பொறுப்பு என ஜெனரல் பொன்சேகா கூறுகின்றார்.
0 comments :
Post a Comment