கம்போடியா இனப் பேரழிவு: கெமர் ருஜ் தலைவருக்கு 30 ஆண்டு சிறை.
கம்போடியாவில் 1970களில் அப்போதைய கெமர் ருஜ் ஆட்சியில் இனப் பேரழிவு குற்றங்களுக்காக டுச் என்பவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெமர் ருஜ் ஆட்சியில் கம்போடியாவில் பட்டினியாலும், அதிகாமான வேலைப் பளுவாலும், மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தாலும் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்கள் மரணமடைந்தனர்.
கம்போடியாவின் கெமர் ருஜ் ஆட்சியில் நிகழ்ந்த இனப் பேரழிவுக்காக இது வரை இவர் மட்டுமே தண்டிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 15,000 ஆடவர், மாதர் மற்றும் குழுந்தை கள் கொலை செய்யப்பட்டதை S-21 என்ற சிறையில் மேற் பார்வையிட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் தம் மீது சுமத்தப் பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
ஆனால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் தம்மை விடுவிக்குமாறு கோரினார். இவருடைய சிறைக்கு அனுப்பப்படும் அனைவரும் கொல்லப்படு வதற்காகவே அனுப்பப்பட்டனர் என்று ஐநா தலைமையிலான நீதிமன்றம் கூறியது.
0 comments :
Post a Comment