களுவாஞ்சிக்குடியில் 30 லட்சம் ரூபா கொள்ளை
மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலிருந்து மற்றொரு வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபா பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 200 மீற்றர் தூரத்தில் இவ்விரு வங்கிகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கித் தேவைகளுக்காக ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு 30 இலட்சம் ரூபா பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பணம் வைக்கப்பட்டிருந்த பையை பறித்துக்கொண்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment