Friday, July 9, 2010

த.தே.கூ னரை உதாசீனம் செய்த இந்திய அதிகாரிகள் : நிருபமா 30 நிமிடமே ஒதுக்கினார்:

இலங்கையிலிருந்து பரிவாரங்களுடன் இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , இந்திய வெளிவிகார அமைச்சர் நிருபமா ராவ் ஐ சந்திப்பதற்கு த.தே.கூட்டமைப்பினருக்கு 30 நிமிடமே ஒதுக்கப்பட்டிருந்தாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இச்செய்திகளின் பிரகாரம் இந்திய தரப்பிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது.

இலங்கையிலிருந்த மணித்தியாலங்களையும் மக்கள் பணத்தையும் செலவழித்து இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இந்திய அதிகாரிகள் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்துவருவதை இந்செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றது. இதில் நகைப்புக்குரிய விடயம் யாதெனில் நிருபமா ராவ் ஐ சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட நேரம் 30 நிமிடங்கள், ஆனால் தாம் நிருபமா ராவ் உடன் பேசியதாக பத்திரிகையாளர்களுக்கு விபரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மணித்தியாலயங்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment