இராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ளும். ஆட்பலம் 2 லட்சம். இராணுவத் தளபதி
இலங்கை இராணுவத்தில் இரண்டு லட்சம் படையினர் உள்ளனர் எனவும் அவர்கள் தேசிய பாதுகாப்பு எதிர் கொள்ளக்கூடிய புதிய பயங்கரவாத சாவல்கள் உட்பட எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தாயாராக உள்ளனர் எனவும் இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் தற்போதைய ஆட்பலம் 203000 க்கு மேலாக உள்ள நிலையில் புதிய ஆட்சேர்ப்புக்களுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ள அவர் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்புக்கள் பயங்கரவாதிகளுடனான யுத்தத்தின்போது அதிகளவு இடம்பெற்றதாகவும் அவ்வாளணியை கொண்டு வடக்கின் அபிவிருத்திக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment