Thursday, July 22, 2010

பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன.

அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.

பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை கர்ப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் வளர்வதாலும், வெவ்வேறு நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதாலும் குழந்தை வளரும்போது இதில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே என்ன செய்யலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com