வெள்ளைக்கொடிச் வழக்கு 29ம் திகதிக்கு ஒத்தி.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டார் என சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்தாக ஜெனரல் பொன்சேகா மீது குற்றஞ் சுமத்தப்பட்டு வழக்கு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இவ்வழக்கினை மேல்நீதின்றுக்கு தள்ளிய நீதிபதி அவரை எதிர்வரும் 29 ம் திகதி மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் அதுவரை இராணுவப் பாதுகாப்பில் வைக்குமாறும் கொழும்பு நீதிவான் ரஷ்மி சிங்கப்புள்ளி உத்தரவிட்டுள்ளார்.
மன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரருக்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல அனுமதி உள்ளபோதிலும் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என தெரிவித்தபோது , இது தொடர்பான தகவல்களை மேல் நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment