ஜெர்மனியில் திருவிழா நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
வடமேற்கு ஜெர்மனியில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.வடமேற்கு ஜெர்மனியின் டியூஸ் பர்க் நகரில் புகழ்பெற்ற இசைத் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க ஜெர்மனி மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் திரளானவர்கள் கூடினர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி வெளியேறியதில் பலர் கீழே விழுந்தனர். இதில் சிக்சி 18 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment