Monday, July 19, 2010

இங்கிலாந்தில் மிகப்பிரபலமான 10 மொழிகள் பட்டியலில் தமிழ். Metropolitan Police

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக லண்டன் மெட்ரோபொலிடன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர உதவிகளுக்காக காவல்துறையினரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ் மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரிசையில் உள்ள ஏனைய மொழிகளாக போலந்து, ரோமான், பஞ்சாப், போர்ச்சுக்கல், ஸ்பானிஸ், துருக்கி, சோமாலி, பிரஞ்சு மற்றும் பெங்காலி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதேவேளை பிரிட்டனில்,ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனுக்கு சென்ற தமிழர்களின் காரணமாகவே தமிழ்மொழி பயன்பாடு 10 இடங்களுக்குள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment