கற்பழித்த இலங்கை இளைஞருக்கு 05 வருட கடூழிய சிறை
கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாக உள்ள இந்தோனேசிய யுவதி (வயது 28)ஒருவரை கற்பழித்துக் கர்ப்பிணி ஆக்கிய இலங்கை இளைஞர்(வயது 24) ஒருவருக்கு டோகா நீதிமன்றம் 05 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இருவரும் ஒரே முதலாளியின் கீழ் வேலை பார்த்து வந்திருக்கின்றார்கள்.
யுவதி முதலாளியின் வீட்டிலும் இளைஞன் முதலாளியின் ஆடைக் களஞ்சியத்திலும் வேலை பார்த்திருக்கின்றனர். முதலாளி ஒரு நாள் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்வையிட வந்த இளைஞன் யுவதியைக் கண்டு கொண்டார். கொஞ்ச நாள் கழித்து முதலாளியின் வீட்டுக்கு அவர் சென்றிருக்கின்றார். அங்கு யுவதியை தவிர அந்த நேரம் வேறு யாரும் இருந்திருக்கவில்லை.
வீட்டு பிரதான மண்டபத்தின் பிரதான கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைய முயன்றிருக்கிறார்.யுவதி தடுக்க முயன்றும் எந்தப் பலனும் இல்லை. யுவதியை பலாத்காரமாக அறைக்குள் இழுத்துச் சென்று முழு நிர்வாணமாக்கினார். பின் கற்பழித்தார். இந்த விடயத்தை எவருக்கும் சொல்லக் கூடாது என்று பயமுறுத்தி விட்டு சென்றார்.
வேலை பறி போகலாம் என்கிற அச்சம் காரணமாக யுவதி இதை யாருக்குமே சொல்லியிருக்கவில்லை. ஆனால் யுவதி நோய் வாய்ப்பட நேர்ந்தது . வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போதே கர்ப்பம் அடைந்திருக்கின்றார் என்று கடந்த ஜூன் மாதம் அளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
கற்பழிப்பு அதற்கு இரு மாதங்களுக்க்கு முன் இடம் பெற்றிருக்கிறது. அதற்குப் பின் யுவதி எல்லாவற்றையும் போட்டு உடைத்தார். ஆனால் குற்றவாளியாக காணப்பட்டிருப்பவர் கற்பழிப்பை மேற்கொண்டு சில நாட்களின் பின் கட்டாரை விட்டு இலங்கைக்கு வந்து விட்டார் என்பதும் அவர் இல்லாமலேயே வழக்கு இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment