பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு நிரந்தர தீர்வு: ஒபாமா
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து முயற்சிகளை தொடர உள்ளதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜி 20 உறுப்பு நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வாஷிங்டன் சென்றுள்ள சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பின்னடைவு, ஈரான் அணு ஆயுத விவகாரம், மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழ்ந்து வரும் மோதல்கள் குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, இஸ்லாமிய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இரு நாடுகளின் விருப்பம் என்றார். 70 ஆண்டுகளாக சவுதி அரேபியா, அமெரிக்கா இடையே நீடித்து வரும் நட்பு குறித்து பெருமிதம் தெரிவித்த ஒபாமா, இதனால் இரு நாடுகளும் பெற்றுள்ள வளர்ச்சிகளை சுட்டிக்காட்டினார்.
பாலஸ்தீன பிரச்சனை குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் நாட்டினை ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1 comments :
இன்னுமா இந்த அமெரிக்காவை நம்புறாங்க.................
Post a Comment