Wednesday, June 9, 2010

புலிகளுக்கு நிதிசேதரித்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது. கனடிய சட்டமா அதிபர்.

புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்கிற வழக்கில் கனடாவில் குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கும் தமிழருக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லையென அந்நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இவ்வழக்கில் பிரபாகரன் தம்பித்துரை என்பவர் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேகரித்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 06 மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் இக்குற்றவாளிக்கு குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் குறைந்தது 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சட்டத்துக்குப் பொருந்தாத வகையில் மிகக் குறைந்த தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்றும் கனேடிய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இலங்கைத் தமிழரான தம்பித்துரை 1988ஆம் ஆண்டு அகதியாக கனடாவுக்கு வந்தார். 1995 ஆம் ஆண்டு கனேடிய பிர்ஜாவுரிமை பெற்றார். புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்கிற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் கனாவில் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முதலாவது நபர் இவரே ஆவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com