தமிழ் அரசியல்வாதிகளை கண்ணால் கண்டதில்லை. கிளிநொச்சி பொலிஸ் அதிகாரி.
பொதுத்தேர்தல் முடிவடைந்து மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியுடன் பிரதேச நிலைமைகள் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தபோது, குறிப்பிட்ட பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கு கடமையில் உள்ளதாக தெரிவிக்கும் பிரத பரிசோதகர் இதுவரை தான் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியையும் தனது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்திக்கவில்லை என கூறுகின்றார்.
பொலிஸ் சேவையில் சுமார் 30 வருடங்கள் உள்ளதாக கூறும் அவர் நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளதாகவும் , சுமார் ஒவ்வொரு நாட்களுமே ஏதோ ஒரு தேவைக்காக அரசியல்வாதிகளை பிரதேசத்தில் அல்லது பொலிஸ் நிலையத்தில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் ஆனால் இங்கு நிலைமை முற்றிலும் மாறானதாகவுள்ளதாகவும் இதுவரை தான் எந்தவொரு பாரளுமன்ற உறுப்பினரையோ அன்றில் உள்ளுர் அரசியல்வாதிளையோ கிளிநொச்சிப் பிதேசத்தில் சந்திக்கவில்லை எனவும் கூறினார். அத்துடன் தேர்தல் காலங்களில் பிரச்சார நோக்கங்களுக்காக அவர்கள் பிறபிரதேசங்களிலிருந்து சில மணித்தியாலங்கள் வந்து சென்றுள்ளதாக சக அதிகாரிகள் கூறியதை கேள்விப்பட்டுள்ளேன் எனவும் கூறினார். அவ்வாறாயின் இவர்கள் எங்கே தங்கியிருக்கின்றார்கள் எனக் கேட்டபோது, அனைவரும் கொழும்பில் என்றார்.
மக்களின் மனநிலை குறித்து பேசியபோது, அங்குள்ள குடும்பங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஆகக்குறைத்தது ஒன்று அல்லது இர ண்டு குடும்ப அங்கத்தினரை இழந்தே உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாதாரணநிலைக்கு திரும்புவதற்கு குறிப்பிடத்தக்க காலம் தேவைப்படும் எனவும் அவர்களுக்கு நிச்சயாமாக உளவியல் ரீதியான உதவி என்பது மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.
பொருளாதாரநிலை தொடர்பாக பேசியபோது, சிலர் மிகவும் செல்வந்தர்களாக காணப்படும் அதேநேரத்தில் பலர் சகலவற்றையும் யுத்தத்தால் இழந்துள்ளனர். ஆனால் இப்பிரதேசம் சகல மூலவளங்களும் உள்ள பிரதேசமாகையால் அவர்கள் இன்னும் 2-3 வருடங்களில் மீண்டும் தமது பழைய நிலைமைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உண்டு என்றார்.
குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக கேட்டபோது, தான் சேவையாற்றிய பொலிஸ் நிலையங்களில் சந்தித்துள்ள குற்றவியல் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிரதேசத்தில் அவ்வாறான அனுபவங்கள் எதுவும் இல்லை என்றதுடன் , சில சில சிறிய சம்பவங்கள் உண்டு எனவும் அவை சிறு குற்றவியல் பிரிவினரால் தீர்த்து வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், ஒருசில திட்டமிட்ட குற்றங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதற்கான குற்றவாளிகள் உடனடியாக இனம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
1 comments :
சுயநல தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் சொகுசாக, ஆடம்பரமாக இருந்து கொண்டு, வாய்கிழிய கத்தி, கத்தி, தமிழ்தேசிய நாடகம் போட்டு, தங்கள், தங்கள் குடும்ப காரியத்தை மட்டும் பார்ப்பது தான் வழமை.
அதுகளை விட தமிழ் பிரதேசங்களில் கடமை புரியும் மனிதாபிமானமுள்ள சிங்கள அதிகாரிகள் எவ்வளவோ மேல்.
இவற்றை வடக்கு தமிழ் மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளும் காலம் வந்துள்ளது.
ஆ.கணபதி
Post a Comment