அரசியமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 7 ஆவது ஆ பிரிவு, xi பிரிவு, xviii அ பிரிவு ஆகியவற்றை உரிய முறையில் மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இனங்காணப்பட்ட ஏனைய சட்டங்களுக்கமைய அரசியலமைப்பைத் திருத்துவதற்கும், மாற்றுவதற்கும், சட்டத்திற்கு அமைவான சட்டமூலங்களை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், ஆலோசனை வழங்குவதற்கும், அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளதெனப் பதில் ஊடக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி முறைமை, நடைமுறைத் தேர்தல் முறைமை மற்றும் அதிகாரங்கள் என்பவற்றில் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏதேனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஊடகவியலாலர் ஒருவர் இங்கு கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பதில் ஊடக அமைச்சர், முதலில் வடபகுதியில் மாகாண சபை முறைமையை நிறுவுவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளதாகக் கூறினார்.
0 comments :
Post a Comment