சீபா தொடர்பாக இதுவரை தெளிவுப்படுத்த வில்லை
இலங்கை ‐ இந்திய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சீபா உடன்படிக்கை சம்பந்தமாக இதுவரை பாராளுமன்றத்தை தெளிவுப்படுத்தவில்லை என ஐனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த உடனபடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும். இலங்கையின் தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடையும்.சேவைகள் மற்றும் இந்திய பொருட்களுக்கு வரி குறைப்புகள் வழங்கப்படுமானால் நாட்டில் வேலையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியூதீன் சீபா உடன்படிக்கை தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இது குறித்த வர்த்தக அமைச்சரே பதிலளிக்க வேண்டும் எனவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருக்கு பதிலளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment