பொருளாதார தடை விதித்தால் அணு திட்ட பேச்சுவார்த்தை இல்லை: ஈரான்
ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை தமது நாடு நிராகரித்துவிடும் என்று அந்நாட்டின் அதிபர் அகமதுனிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் மீது நான்காவது பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மான வரைவை இறுதிப்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தைக் காட்டி அச்சுறுத்தி தங்களை பேச்சுவார்த்தையில் உட்கார வைக்கலாம் என நினைத்தால் அது தவறாக போய்விடும் என்று அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளிடம் தாம் திட்டவட்டமாக கூறி உள்ளதாக அகமதுனிஜாத் தெரிவித்தார்.
மரியாதையும், உறுதியும் உள்ள ஒவ்வொருவரிடம் பேச்சு நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு எங்களுடன் பேசலாம் என யாராவது நினைத்தால், அதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்று அவர் மேலும் கூறினார்.
...............................
0 comments :
Post a Comment