Saturday, June 26, 2010

புலிகள் சரணடையவிருந்தமை பற்றி அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது .

இலங்கையின் போர் இறுதிகட்டத்தை அடைந்திருந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடை விருப்பம் தெரிவித்திருந்தமை இலங்கை அரசின் உயர் மட்டதினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தாக நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேம் தெரிவித்துள்ளார். புலிகளின் விருப்பத்தை தான் நேரடியாக அரசாங்கத்திற்கு அறிவித்திருந்ததாக தெரிவித்துள்ள அவர் இலங்கை அரசில் யாரிடம் இதை தெரிவித்திருந்தார் மற்றும் அதற்கான ஒப்புதல் இலங்கை அரச தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்றிருந்ததா என்பது தொடர்பாக தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கூறிய அவர் புலிகளின் சமாதான செயலகத்தைச் சேர்ந்த புலித்தேவன் , அரசியல் துறைத் தலைவர் நடேசன் ஆகியோர் மே 17ம் திகதி புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு விரும்புவதாகவும் அதற்கு ஆவன செய்யுமாறு வேண்டியிருந்தாகவும் தெரிவித்துள்ளதுடன் அப்போது அதற்கான நேரம் கடந்திருந்ததாகவும் வெள்ளைக் கொடிகளைக் தூக்கிக்கொண்டு முன்னே செல்வது ஒன்றே தற்போதைக்கு உள்ள வழி என தான் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தாகவும் கூறியுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு நோர்வே பூரண ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் அமைச்சர் சொல்கேம் இன் ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் புலிகள் சரணடையும் போது அவர்கள் எவ்வாறு நடாத்தப்படுவார்கள் என்ற எவ்வித உறுதி மொழியும் வழங்கப்படவில்லை என்பதும் சரணடைதலை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் அத்தருணத்தில் தயாராக இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அவ்வாறு இலங்கை அரசாங்கம் அவர்களின் சரணடைதலை ஏற்றுக்கொள்ள தயாராகவிருந்திருந்தால் அதற்கான நிபந்தனைகள் மற்றும் உறிதிமொழிகளை வெளிப்படுத்த எரிக் சொல்கேம் தயங்கப்போவதில்லை.

புலிகளின் தலைவர் சரணடைந்து கோடாரியால் கொத்துவாங்கிச் செத்தாரா அன்றில் கே.பி தெரிவித்திருந்ததுபோல் தன்தலைவன் வீரமரணமடைந்தாரா என்பது பற்றி விவாதிக்க மக்கள் தயாராகவில்லை. விவாதிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் இத்தனை அளிவுகளையும் சந்தித்த பின்னர் என்ன நோக்கத்திற்காக புலிகளின் தலைவர்கள் சரணடைய முயற்சித்தனர்? அவ்வாறு அவர்கள் சரணடைய முன்னர் மக்களை ஏன் விடுவிக்கவில்லை? 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி நேரத்திலும் ஏன் குழந்தைகளை பலவந்தமாக பிடித்திருந்தார்கள்? ஏன் கேள்விகளை அடிக்கிகொண்டே செல்ல முடியும்.

2 comments:

  1. what this guy need from srilanka, fool,

    ReplyDelete
  2. ஏறிக் சொல்கேம் புலிகளுக்கு மிகவும் ஆதரவாக நடந்து, சார்பாக நடந்து, புலிகளின் தலைக்கனம் கூடி, தான்தோன்றித்தனமாக செயல் பட காரணமாக இருந்து வந்தார் என்பதே உண்மை.

    ஏறிக் சொல்கேம் அல்லது நோர்வே நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே உலக ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தி, புலிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அமைதிப் பேச்சிகளை ஓரளவு வெற்றியடைய செய்திருக்கலாம்.

    கிளிநொச்சி பறிபோன போது கூட சரணடைய தூண்டி இருக்கலாம். அவ்வாறாயின் வன்னி மக்களும், மண்ணும் அழிவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்.

    ReplyDelete