த.தே.கூ அரசுடன் இணைந்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது. ஆனந்த சங்கரி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு தாளம்போட்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி குற்றம் சாட்டுகின்றார். த. தே. கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திபின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இழைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பாக உறுதியாக பேசத்தவறியுள்ளதாகவும் மாறாக அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இறுதி சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாகவே பேசியதாகவும் அதுவே தற்போதைய தேவை எனவும் தெரிவித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த தறுவாயில் தமிழ் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் நிறையவே இருந்தது. அத்தருணத்தில் மக்களின் தேவைகள் தொடர்பாக எதுவுமே வாய்திறக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் கஞ்சிக்காக கையேந்தி நிற்கவில்லை எமது மக்களின் அத்தியாவசிய தேவை அரசியல் தீர்வே எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மக்களின் தேவைகள் ஓரளவேனும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசியல் தீர்வு விடயமாக நியாமான கோரிக்கையை முன்வைத்து தீர்வொன்றை நோக்கி நகராமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்பதை இலகுவாக உணரமுடிகின்றது.
0 comments :
Post a Comment