Wednesday, June 9, 2010

யுத்த குற்றம் தொடர்பான ஐ.நா வின் விசாரணைக்கு பூரண அதரவு : ஜெனரல் பொன்சேகா.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை தடுக்க தாம் யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளில் கலந்து கொள்வதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விசாரணைகளின் போது ஆஜராகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் ஒர் அலகாக செயற்பட்ட சந்தர்ப்பங்களில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பில் தமக்கு தெரிந்திருந்தால் எந்த நேரத்திலும் அதனை அம்பலப்படுத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார். எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் காணப்பட்டால் அதனை அம்பலப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட வேண்டியது இந்த நாட்டு குடிமகனின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட வேண்டியது கடமையாகும் எனவும், அவ்வாறான தகவல்களை வெளியிட எவரேனும் தயக்கம் காட்டினால் அவர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றே அர்த்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட உலக அமைப்புக்களுடன் இலங்கை நெருக்கமாக செயற்பட்டு வருவதகாவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவை தொடர்பில் விசாரணை செய்து இலங்கையின் பெயரை களங்கமற்றதாக்குவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை தாம் மேற்பார்வை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் நெருங்கிச் செயற்பட்டதனால் யுத்த காலத்தின் சகல தரவுகளும் தமக்கு துல்லியமாக தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் நாம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

விமானப்படையினரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனிப்பட்ட நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை எவரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது உயிர் குறித்து கவலைப்படவில்லை எனவும், தாம் எந்தவொரு பிழைகளையும் இழைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com