நளினி சிறை அதிகாரிகளுக்கு எதிராக 3 பக்கத்தில் புகார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வருகிறார் நளினி. அவர் தற்போது இருக்கும் சிறையில் தனக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறி தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நளினியின் வக்கீல் புகழேந்தி வேலூர் சிறையில் நளினியை சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களிடம், சிறை அதிகாரிகள் சிறை விதிமுறைகளை மீறி தன்னை தனிமைப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
’’நளினியைப் பொறுத்தவரை சிறைக் கையேடு வகுத்துள்ள கைதிகளின் உரிமைகளை சிறை அதிகாரிகள் மீறுகின்றனர். இது நளினி செய்துள்ள 3 பக்க புகார் அறிக்கை.( செய்தியாளர்களிடம் வாசித்தார்) இதனால் சிறை ஐ.ஜி.யிடம் தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் நளினி.
என்னுடைய அறையின் பக்கம் வேறு கைதிகள் புழங்குவதை சிறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். சிறை ஊழியரோ, அல்லது சிறைக்கைதிகளோ என்னிடத்தில் பேச அனுமதி கிடையாது. என்னை ஏதோ தொற்று நோயாளி போல் நடத்துகின்றனர் என்று புகாரில் கூறியுள்ளார் நளினி.
நளினி இதுவரை சிறை அதிகாரிகளின் இத்தகைய போக்கு குறித்து 8 புகார்களை அளித்துள்ளார். மேலும் வேறு கைதிகளையும் இதே விதத்தில் நடத்தி அவர்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படைகளை உரிமைகளை சிறை அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் அவர் அந்தப் புகார்களில் கூறியிருக்கிறார்’’என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment