வங்கதேசத்தில் தீ விபத்து: 104 பேர் பலி
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 104 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் தீ அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை ஒன்றில் பரவியது.
தொழிற்சாலையில் ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியதில் 104 பேர் உடல் கருகி பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பல பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பிரதமர் ஷேக் ஹசீனா , சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment